இன்றைய தொழில்நுட்ப காலத்தில் நாம் அம்மியில் அரைப்பதையும், ஆட்டுக்கல்லில் ஆட்டுவதையும் விட்டு விட்டோம். சில பொருட்களை நம் முன்னோர்களுடைய நினைவாக நாம் இந்த காலத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட பாதுகாத்து வருகிறோம். அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும் மகாலட்சுமிக்கு இணையாக அந்த காலத்தில் பார்க்கப்பட்டது. அதில் கால் வைக்கவோ, உட்காரவோ மாட்டார்கள். மஞ்சள் பூசி பொட்டு வைத்து வழிபடுவார்கள். மிக்சி, கிரைண்டர் வந்த பிறகு பலர் வீடுகளில் அம்மிக்கல், ஆட்டுக்கல்லை குப்பை போல ஏதோ ஒரு மூலையில் போட்டு வைத்திருப்பார்கள்.
தெய்வாம்சம் பொருந்திய இந்த இரண்டு பழங்கால பொருட்களை சரியான திசையில் வைத்து நாம் பயன்படுத்தினால் நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும். ஆட்டுக்கல், அம்மிக்கல்லை ஒருபோதும் நாம் நம்முடைய வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்கக் கூடாது. வடகிழக்கு என்பது வெட்ட வெளியாகவும் பாரம் இல்லாமலும் இருக்க வேண்டும். அந்த திசையில் வடகிழக்கு மூலையில் அம்மிக்கல்லை போட்டு வைத்தால் வருமானம் தடைபடும்.
வீட்டின் தென்மேற்கு பகுதி சமையல் அறை உள்ள தென்கிழக்கு பகுதியில்தான் அம்மிக்கல்லையும் ஆட்டுக்கல்லையும் போட்டு வைக்க வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலை தான் அம்மிக்கல், ஆட்டுக்கல் வைப்பதற்கு சரியான திசையாக இருக்கும். வீட்டில் மற்ற அறைகளை காட்டிலும் சமையலறையில் தென்கிழக்கு பகுதியில் இவற்றை வைத்து பாதுகாத்து வந்தால் நல்லது நடக்கும். அப்படி இல்லாமல் உங்கள் வீட்டில் பின்புறத்தில் இடம் இருந்தால் அங்கு கூட நீங்கள் வைத்துக் கொள்ளலாம். வீட்டிற்குள் வைப்பதை விட வீட்டிற்கு பின்புறத்தில் வைப்பது நல்ல பலன்களை தரும் என்பார்கள். எந்த திசையில் வைத்தாலும் வடகிழக்கு திசையில் மட்டும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
Read More : உங்ககிட்ட பான் கார்டு இருக்கா..? அப்படினா கண்டிப்பா இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க..!!