எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான ‘அன்பே ஆருயிரே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிலா. இவர், பாலிவுட்டில் மீரா சோப்ரா என்ற பெயரில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தான் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகை மீரா சோப்ராவின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ராஷ்மிகா, சமந்தா உள்பட ஒரு சில நடிகைகளின் டீப் பேக் வீடியோ வெளியானது என்பதால் இதுவும் அதே போன்ற ஒரு வீடியோவாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ‘லெஜண்ட்’ என்ற படத்தில் நடித்த ஊர்வசி ரெளட்டாலாவின் குளியல் வீடியோ வெளியானதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த வீடியோ ஒரு திரைப்படத்திற்காக படமாக்கப்பட்டது என்றும் தன்னுடைய பர்சனல் வீடியோ இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஒரே நாளில் பிரபல நடிகைகளின் குளியல் வீடியோ மற்றும் ஆபாச வீடியோ வெளியாகி உள்ளது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.