fbpx

’தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்’..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை (மஞ்சள் எச்சரிக்கை) பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (ஆகஸ்ட் 2) மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

வரும் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஒருநாளைக்கு எத்தனை முறை காஃபி குடிக்கிறீங்க..? கல்லீரலுக்கு ஆபத்தா..? உண்மை இதுதான்..!!

English Summary

Light to moderate rain with thunder and lightning is expected at a few places in Tamil Nadu and Puducherry and Karaikal today.

Chella

Next Post

வயநாட்டில் நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி..!! தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்பு..!!

Thu Aug 1 , 2024
Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi and Congress General Secretary Priyanka Gandhi are visiting the landslide affected areas in Wayanad.

You May Like