mpox வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை காரணமாக, சர்வதேச மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்க உலக சுகாதார அமைப்பு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்காவில் mpox வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக அவசர கூட்டம் ஒன்றை கூட்ட முடிவு செய்துள்ளதாக WHO நிர்வாக இயக்குனர் Tedros Adhanom தெரிவித்துள்ளார்.
mpox வைரஸ் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஆப்பிரிக்காவுக்கு வெளியே பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 2023ஆம் ஆண்டு 27,000 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,000 பேர்கள் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலும் சிறார்களே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆப்பிரிக்காவின் 10 நாடுகளில் தற்போது mpox வைரஸ் பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 19 சதவிகிதமாக இருந்த இறப்பு எண்ணிக்கை தற்போது 160% ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்த நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வைரஸ் நோய் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் விலங்குகள் அல்லது அசுத்தமான பொருட்களுடன் உடல் தொடர்பு மூலமாகவும் mpox வைரஸ் பரவுகிறது. பொதுவாக காணப்படும் அறிகுறியாக தோல் அரிப்பு, புண்கள், காய்ச்சல், தசை வலிகள், தலைவலி, முதுகுவலி ஆகியவையாகும்.
Read More : தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..?