திருமணமான பிள்ளைகளுடன் வசிக்கும் பெற்றோர்கள் அவர்களுடன் சுமூகமாக இருக்க சில ஆலோசனைகள் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
* திருமணம் ஆகும் வரைதான் அவர்கள் நம் பிள்ளைகள். திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு என்று குடும்பம் இருக்கிறது என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
* அலுவலக நெருக்கடி மற்றும் பொருளாதார பிரச்சனைகளில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமென தவிர, குத்திக்காட்டி பேசக் கூடாது.
* உரிமை என்ற பெயரில் அவர்கள் குடும்பத்துக்குள் நமது ஆலோசனைகளை திணிக்க வேண்டாம்.
* பேரக் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அதிக செல்லம் தருகிறேன் என்ற பெயரில் பெற்றோர் கண்டிக்கும்போது தலையிடாமல் இருப்பது அவசியம்.
* அவர்கள் செலவு செய்யும் விஷயத்தில் கேள்வி கேட்டு, அவர்களை எரிச்சலடைய வைக்கக் கூடாது. அவர்கள் வருமானம் என்ன? எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கே தெரியும்.
* அவர்கள் அழைத்தால் மட்டுமே அவர்களுடன் வெளியே செல்ல வேண்டும். அழைக்காதபோது வேறு காரணங்கள் இருக்கலாம் என புரிந்துகொள்ள வேண்டும்.
* வயதாகி விட்டது என அறைக்குள்ளேயே முடங்கி கிடக்காமல், நம் வேலைகளை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, எதற்கெடுத்தாலும் அவர்களை சார்ந்து இருக்கக் கூடாது.
* அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரும்போது நமது பிரதாபங்களை சொல்லாமல் நகர்ந்து சென்று விடுங்கள்.
* ‘நம் கால வசதிகள் வேறு, அவர்கள் கால வசதிகள் வேறு’ என்பதை ஏற்றுக்கொண்டு புரிதலுடன் அன்பை செலுத்தினால் நாளடைவில் பிள்ளைகளே நம் நிலை தெரிந்து தேவையான சுதந்திரம் மற்றும் அரவணைப்பை வழங்குவார்.
Read More : ”தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம்”..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!