fbpx

JOBS | டிகிரி முடிச்சிருக்கீங்களா? இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

இந்தியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரிகள் ( Local Bank Officers) பதவியில் 300 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 160 இடங்கள் நிரப்பப்படுகிறது. சம்பளம் ரூ.48,480 முதல் அதிகபடியாக ரூ. 85,920 வரை சம்பளம் வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அந்தந்த மாநிலங்களின் பணி வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 160 காலிப்பணியிடங்களில் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 24 இடங்கள், எஸ்டி பிரிவினருக்கு 12 இடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 43 இடங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 43 இடங்கள், பொது பிரிவினருக்கு 65 இடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

வயது வரம்பு :

  • இந்தியன் வங்கியில் உள்ள உள்ளூர் வங்கி அதிகாரிகள் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளடு.
  • மேலும், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பிற்கான மதிப்பெண்கள் சான்றிதழ்கள் மற்றும் டிகிரி சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்  https://www.indianbank.in/career/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175, இதரப் பிரிவினருக்கு ரூ.1000 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2024 ஆகும்.. தேர்வு குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Read more ; ’நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்’.!! தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!!

English Summary

Indian Bank has released a notification to fill up 300 vacancies for the post of Local Bank Officers.

Next Post

வீட்டு வாசலில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்தினால் என்ன நடவடிக்கை தெரியுமா..? ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

Wed Aug 21 , 2024
The Madras High Court has ordered the traffic police to report what action will be taken against those who park vehicles without permission at the door in Chennai.

You May Like