முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு 17 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார். அமெரிக்கா சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கா பயணத்தை முன்னிட்டு தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருக்கிறது. தமிழ்நாடு அமைச்சரவையில் சீனியர் உட்பட மொத்தம் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3 புதிய முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாம். அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்கள், திமுக பலவீனமாக உள்ள பகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த 3 புதிய முகங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட இருக்கிறதாம். அத்துடன் அமைச்சர்களது பலரது துறைகளும் பெரிய அளவில் மாற்றப்பட இருக்கிறதாம்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்து நான்காவது ஆண்டில் பயணித்து வருகிறது. இந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போதைய அமைச்சரவை மாற்றம் மிகப் பெரிய அளவில் இருக்கும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Read More : தவெக கட்சிக் கொடியின் அர்த்தம் என்ன தெரியுமா..? இவ்வளவு பெரிய வரலாறே இருக்கா..?