தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சி கடந்த 22ஆம் தேதி சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. திட்டமிட்டபடி அன்றைய தினம் விஜய் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த கொடியில், இரட்டை போர் யானை நடுவில் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்றிருந்தன.
கட்சிக் கொடி வெளியீட்டிற்கு பிறகு அனைவரது பார்வையும் விஜய் கட்சியின் மாநாடு மீது தான் இருந்து வந்தது. திருச்சி, சேலம், தஞ்சை, விக்கிரவாண்டி என பல இடங்கள் மாநாட்டிற்காக தேர்வு செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. திருமாலை நேரில் சந்தித்து விக்கிரவாண்டி பகுதியில் அடுத்த மாதம் 23ஆம் தேதி கட்சி மாநாடு நடத்த அனுமதிக்குமாறு மனு அளித்துள்ளனர்.
எஸ்.பி. அலுவலகத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்க உள்ளனர். தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாடு குறித்த விவரங்களை கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் என்று கூறினார்.
Read More : ரயிலில் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! சிறைக்கு செல்ல நேரிடும்..!! விதிகளை தெரிஞ்சிக்கோங்க..!!