fbpx

நீயெல்லாம் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசலாமா..? என்கிட்ட நிறைய செருப்பு இருக்கு..!! நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு பதிவு..!!

கேரளாவில் நடிகைகள் தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் பாலியல் தொல்லைகளை அனுபவித்து வருவதாக புகாரளித்த நிலையில், நீதிபதி ஹேமா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த குழு வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை கிளப்பியது. பல முன்னணி சினிமா பிரபலங்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், ”பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம் நீ பேசலாமா? ஒரு பெண்ணை பற்றி பேசும் போது உன்னுடைய நாக்கு ரொம்பவே கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். உலகிற்கே தெரியும் நீ எவ்ளோ பெரிய ஃபிராடு என்று. ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசும் போது உன் உடல் ஏன் நடுங்குது..? நீயெல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போறியா..?

அதெல்லாம் சரி, உன்னுடன் இருந்த பெண்கள் எல்லாம் உன்னை விட்டு ஏன் சென்றனர்..? உன்னுடைய நிச்சயதார்த்தம் ஏன் நின்றுப் போனது..? இந்த கேள்விக்கெல்லாம் அடுத்த முறை பதில் சொல். நீ எந்த பதவியில் இருந்தாலும் எனக்கு கவலையில்லை. கர்மா ஏற்கனவே உனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வருகிறது. என் வீட்டில் நிறைய வித விதமான செருப்புகள் உள்ளன” என நடிகரின் பெயரை குறிப்பிடாமல் நடிகை ஸ்ரீரெட்டி ட்வீட் போட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, நடிகர் விஷால் தான் செய்தியாளர் சந்திப்பின் போது ஹேமா குழு போல தமிழ்நாட்டிலும் ஒரு குழு அமைக்கப்படும். பெண்களிடம் தவறாக நடந்துக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை செருப்பால் அடியுங்கள் என பேசியிருந்தார். ஸ்ரீரெட்டி விஷால் மீது ஏற்கனவே சுமத்திய குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன என்கிற கேள்விக்கு ஸ்ரீரெட்டி யார் என்றே தெரியாது என்றும் அவரோட சேட்டைகள் பற்றி தெரியும் என பேசியிருந்தார். இதனால், ஸ்ரீரெட்டி குறிப்பிட்டு பேசியிருப்பது விஷாலைத்தான் என்று சோசியல் மீடியாவில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read More : பொங்கல் பண்டிகை..!! பயனாளிகளுக்கு வேட்டி, சேலை..!! ரூ.100 கோடி விடுவித்த தமிழ்நாடு அரசு..!!

English Summary

“I have many different types of sandals in my house” without mentioning the actor’s name, actress Srireddy has tweeted which has created a lot of excitement.

Chella

Next Post

WHO எச்சரிக்கை!. சண்டிபுரா வைரஸ் தாக்கம்!. இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு!.

Fri Aug 30 , 2024
The World Health Organisation (WHO) has issued a worrying warning, saying that the current outbreak of the Chandipura virus in India is the largest in the last 20 years.

You May Like