சென்னையை சேர்ந்த பிரபல மலையாள நடிகையான சர்மிளா, தன்னையும் சிலர் கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ’காலம் மாறிப்போச்சு’ என்ற திரைப்படத்தின் ரீமேக் மலையாளத்தில் எடுக்கப்பட்டது. அதன்பெயர் ’அர்ஜூனன் பிள்ளையும் அஞ்சு மக்களும்’. அந்தப் படத்தில் நான் நடித்திருந்தேன். அதில், ஒரு பாடல் எடுப்பதற்காக படக்குழு பொள்ளாச்சிக்கு வந்திருந்தது.
அந்த பாடல் முடிந்து பேக்கப் செய்யும் நாளில், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அவரது நண்பர்கள் என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். ஷூட்டிங் முடிந்து கிளம்புறப்போ இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் கிட்ட சொல்லிட்டு போறது வழக்கம். அப்படி சொல்லிட்டு கிளம்புறதுக்காக நானும் என்னோட அசிஸ்டென்ட் பெண்களும் போயிருந்தப்போ, எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி பண்ணுனாங்க.
அது பொள்ளாச்சி என்பதால், நான் வெளியே ஓடிச்சென்று ஆட்டோ டிரைவர்கிட்ட சொல்லி, என் அப்பாவின் நண்பர்கள் வீட்டுக்கு கூட்டிட்டுப்போகச் சொன்னேன். ஆட்டோ டிரைவர்களே முழுமையாக இறங்கி என்னைக் காப்பாத்துனாங்க. என் அப்பாவின் நண்பர்கள் அப்போது பொள்ளாச்சியில் இருந்தாங்க. அப்போது எல்லாம் போன் வசதி இல்ல. பிறகு, எஸ்.டி.டி. கால் புக் செய்து அப்பாகிட்ட போனில் பேசி, அதன்பின், அப்பா வந்து ராஜாத்தி அம்மாள்கிட்ட சொல்லி, அதுக்கப்புறம் போலீஸ் வந்து, அவங்களை பிடிச்சு ஜெயிலில் போட்டாங்க. இதுவரை என்னிடம் 25 பேர் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ருக்காங்க.
இந்த ஹேமா கமிட்டி மாதிரி அப்பவே இருந்திருந்தால், ஈஸியாக இருந்திருக்கும். தமிழ்நாட்டில் எந்தவொரு பிரச்சனையும் வரவில்லை. தெலுங்கு படத்தில் நடிக்கும்போது படத்தின் தயாரிப்பாளர்களே, இயக்குநர்களை கண்டிச்சு, தவறாகப் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. பல இடங்களில் பாலியல் புகார்கள் இருந்தாலும், எங்க நடிகைகளிலேயே சிலர் இப்போது அட்ஜெட்மென்ட் பண்ணிப்போய் பணம் சம்பாதிச்சால்தான் என்ன தவறு இருக்கு என்று மாற்றுக் கருத்துடன் தான் இருக்கிறார்கள். இப்படி பிரிஞ்சிருக்கும்போது எந்த கமிட்டி ஃபார்ம் பண்ணுனாலும் ஒன்னும் செய்ய முடியாது. இந்த மாதிரியான விவகாரங்களில் ஒற்றுமையாக இருந்தால் தான் தீர்வு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
Read More : ”ஒருத்தனுக்கு நாம கொடுக்குற தண்டனையை பார்த்து அந்த சிந்தனை வரக்கூடாது”..!! கொந்தளித்த சனம் ஷெட்டி..!!