fbpx

சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி பலாத்காரம்..!! நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு..!!

மலையாள நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாள சினிமாவில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகர் நிவின் பாலி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருடன் சேர்ந்து சிலர் தன்னை வன்கொடுமை செய்ததாகவும் இளம்பெண் ஒருவர், கொச்சி ரூரல் எஸ்.பி-க்கு முதலில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் ஊன்னுகல் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த பெண் அளித்த புகாரில், ”கடந்த 2023இல் ஒரு வேலையாகத் துபாய்க்குச் சென்ற சமயத்தில், ஸ்ரீயா என்ற பெண் தனக்கு நிவின் பாலியை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி நிவின் பாலி மற்றும் நான்கு பேர் சேர்ந்த தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நடிகர்கள் மீதான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் நடிகர் நிவின் பாலி, ஸ்ரீயா உட்பட 6 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் ஸ்ரீயா முதல் குற்றவாளியாகவும், நிவின்பாலி 6-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

Read More : SSLC தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? சூப்பர் வேலை..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? விண்ணப்பிக்க டைம் இல்ல..!!

English Summary

Actor Nivin Pauly on sexual assault charges

Chella

Next Post

கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து!. கர்ப்பிணி, 6 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி!.

Wed Sep 4 , 2024
At least 12 dead, including children, after boat rips apart in English Channel off France

You May Like