fbpx

‘மாணவர்களின் திசைகாட்டி..’ ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்..!!

மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்படுகிறது. கல்வி துறையில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும், மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியர்களின் அர்பணிப்பை போற்றும் வகையில் இன்றைய தினம் கொண்டாட்டப்படுகிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆசிரியர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு #TeachersDay வாழ்த்துகள்!’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Read more ; ஆபத்தில் இந்தியா!. சண்டிபுரா வைரஸ் பாதிப்பின் வேகம் அதிகரிப்பு!. எச்சரிக்கை!

English Summary

Chief Minister M.K.Stalin has said that teachers day greetings to the good teachers who act as a compass for the students.

Next Post

அப்பவே சொன்னேன் கேட்டீங்களா?இப்போ மேட்டர் சீரியஸ்.. இனியாவது ஆக்‌ஷன் எடுக்க முதலமைச்சரே..!! பாயிண்டோடு வந்த EPS

Thu Sep 5 , 2024
Edappadi Palanichamy has issued a statement demanding action following the suicide of a student caught in a ganja raid in Potheri.

You May Like