fbpx

நான் அப்படி என்ன சொல்லிட்டேன்..!! எதுக்கு ஓடி ஒளிய வேண்டும்..!! நேர்ல வந்து பேசிக்குறேன்..!! மகா விஷ்ணு வெளியிட்ட வீடியோ..!!

அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணு, ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகா விஷ்ணு என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்ஜென்மம் குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார் மகா விஷ்ணு. மேலும், இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரே மாதிரி படைத்திருக்க வேண்டும். கோடீஸ்வரன், ஏழை, நல்லவன், கிரிமினல், ஹீரோ, வில்லன் ஏன் இத்தனை மாற்றங்கள் இருக்க வேண்டும். போன ஜென்மத்தில் செய்யும் பாவ, புண்ணியம் தான் இப்போது நமது வாழ்க்கை உரையாற்றினார்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. மேலும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. இதற்கிடையே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் தான், இதுகுறித்து மகா விஷ்ணு விளக்கம் கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள அவர், இன்று சென்னை திரும்புவதாகவும், வந்ததும் விளக்கம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, அதற்கான அவசியமும் இல்லை. என்னைப் பற்றி ஊடகங்களிலும், செய்திகளிலும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. என்னை பற்றி தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.

தற்போது நான் ஆஸ்திரேலியாவில் உள்ளேன். இங்கிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டும், ஆனால், நான் அங்கு போகாமல் சென்னைக்கே வருகிறேன். ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அப்படி என்ன கருத்தை நான் சொல்லிவிட்டேன். சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். இதை அடிப்படையாக வைத்து என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்களா..? என தெரியவில்லை.

மேலும் பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்திலும் திருப்பூரில் உள்ள எனது இல்லத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களது வேலையை காவல்துறையினர் சரியாகச் செய்கிறார்கள். அதில் எந்த தவறும் கிடையாது. அதேநேரம் எனது விளக்கத்தை அளிக்கும் கடமை எனக்கு இருக்கிறது. எனவே, இன்று (செப்.7ஆம் தேதி) மதியம் 1.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறேன்.

காவல்துறையினர் மீதும் சட்டங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை உடையவன் நான். இதுகுறித்து காவல்துறையிடம் நேரில் சென்று விளக்கம் அளிப்பேன். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதையும் பார்க்க முடிந்தது. அவரது கோபத்தையும், சீற்றத்தையும் மிகத் தெளிவாகக் காண முடிகிறது. அவருக்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு அறிவு தெளிவு இருக்கிறதா? எனத் தெரியவில்லை என்று பேசியுள்ளார்.

Read More : ஐஸ்கிரீமில் மது கலந்து விற்பனை..!! ஆசையோடு வாங்கி சாப்பிடும் குழந்தைகள்..!! ஹைதராபாத்தில் அதிர்ச்சி..!!

English Summary

Maha Vishnu, who spoke controversially in a government school, has released a video from Australia.

Chella

Next Post

பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விடும் ’GOAT’..!! இரண்டே நாளில் ரூ.200 கோடியை தாண்டிய வசூல்..?

Sat Sep 7 , 2024
The highly awaited film Code, released by Kollywood fans on 5th September.

You May Like