fbpx

’நாசா நினைத்தால் சுனிதாவை மீட்க முடியும்’..!! ’ஏன் செய்யவில்லை’..? உண்மை காரணம் இதுதான்..!!

விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார். அவரை ஏற்றி சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் பழுதானதால், அவரை அழைத்து வராமல் பூமிக்கு திரும்பிவிட்டது. இதனால், அடுத்த ஆண்டுதான் சுனிதாவை அழைத்து வருவோம் என்று நாசா தெரிவித்துள்ளது. சுனிதாவை அழைத்து வர ஏன் ஒரு வருட காலம் தாமதம் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பூமியில் இருந்து ஏறத்தாழ 400 கி.மீ. உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். இந்தப் பணிகளை நாசாதான் மேற்கொண்டு வந்தது. சமீபத்தில் இந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க நாசா முடிவெடுத்தது. இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் இருப்பதால், இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது.

போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக்கொண்டது. இதற்காக ‘ஸ்டார் லைனர்’ எனும் ஸ்பேஸ் ஷிப்பையும் தயாரித்தது. இந்த ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதாவும், வில்மோரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ஆம் தேதியன்று ஸ்டார்லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. ஆனால், இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு மூன்று முறை ‘ஸ்டார்லைனரின்’ பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்படி இருக்கையில், தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜூன் 7அஅம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற இருவரும், ஜூன் 14ஆம் தேதியே பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 26ஆம் தேதி இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார்லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கித் தவித்து வருகின்றனர். அவரை அழைத்து வரச் சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் இரு தினங்களுக்கு முன்பு, ஆள் இல்லாமல் பூமிக்கு வந்து சேர்ந்தது.

சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு அழத்து வரப்படுவார் என்று நாசா கூறியுள்ளது. ஏன் சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளளனர். இதற்கு விண்வெளி துறை சார்ந்த நிபுணர்கள், அதாவது முதல் விஷயம், ”சுனிதா விண்வெளியில் சிக்கிக் கொள்ளவில்லை என்பதுதான். இரண்டாவது விஷயம் அவரை மீட்க எந்த உடனடியான அவசர நடவடிக்கையும் தேவையில்லை. பொதுவாக விண்வெளி வீரர்களின் பயண காலம் 6 மாதங்கள் வரை இருக்கும். எனவே, சுனிதா விண்வெளியில் பாதுகாப்பாக இருக்கிறார். இஸ்ரோ நினைத்தால் சுனிதாவை அழைத்து வர முடியும். ஆனால், அதற்கு எந்த அவசியமும் இல்லை” என்று தெரிவித்தார்.

Read More : பால் முதல் அரிசி வரை..!! திருமணமான பெண்களே நோட் பண்ணிக்கோங்க..!! நீண்ட ஆயுள் கிடைக்குமாம்..!!

English Summary

Sunita Williams will be brought back to Earth in February next year, according to NASA.

Chella

Next Post

நோட்!.நட்சத்திர சின்னத்துடன் கூடிய ரூ.500 நோட்டுகள்!. சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!

Thu Sep 12 , 2024
RBI issues special guidelines for Rs 500 notes having star symbols

You May Like