fbpx

அமெரிக்க தேர்தல்.. இரண்டுமே வாழ்க்கைக்கு எதிரான கொள்கைகள்..!! யாருக்கு வாக்களிப்பது? – போப் பிரான்சிஸ் அறிவுரை

ஆசிய நாடுகளில் 12 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போப் பிரான்சிஸ், ரோம் திரும்பும் வேளையில் சிங்கப்பூரில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என கத்தோலிக்க மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தாம் ஒரு அமெரிக்கரல்ல என குறிப்பிட்டுள்ள போப் பிரான்சிஸ், அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத புலம்பெயர் மக்களை மொத்தமாக வெளியேற்ற இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளதும், கருக்கலைப்புக்கு ஆதரவளிக்க இருப்பதாக கமலா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி இருவரும் மிக ஆபத்தானவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களம்கண்டுள்ள இருவரும் வாழ்க்கைக்கு எதிரான கொள்கைகள் கொண்டவர்கள் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். டொனால்டு ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் தங்கள் கொள்கைகளால் மிக ஆபத்தானவர்கள் என்பதால், இதில் யார் மிக ஆபத்தானவர் என்பதை புரிந்துகொண்டு, அவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றார். ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சிப்படி சிந்தித்து இந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

Read more ; 2 இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம்..!! தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

English Summary

Pope Francis slams Trump, Harris for ‘anti-life policies’, urges Catholics to vote for ‘lesser evil’

Next Post

’உங்களை அனுமதித்தால் என் வேலை போயிடும்மா’..!! தேர்வெழுத தாமதமாக வந்த மாணவியிடம் கெஞ்சிய போலீஸ்..!!

Sat Sep 14 , 2024
The police SI who was there who did not know otherwise. One cannot let you. He begged me that if I allow it, my job will go away.

You May Like