fbpx

இஸ்ரேல் தாக்குதல்!. ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட தளபதி உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்!.

Israeli Strike: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த இஸ்ரேலிய தாக்குதலில் ஹெஸ்புல்லாவின் உயர்மட்ட தளபதி இப்ராஹிம் அகில் உடன் சுமார் 9 மூத்த ஹிஸ்புல்லா தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

1983ல் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணம் அகில் என்று அமெரிக்கா கூறியது. அந்த தாக்குதலில் 63 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டில், அகில் அமெரிக்க மரைன் பாராக்ஸ் மீதான தாக்குதலில் ஈடுபட்டார், இதில் 241 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, அகிலை பற்றி தகவல் கொடுத்ததற்காக அமெரிக்கா 7 மில்லியன் டாலர் (சுமார் ரூ.53 கோடி) வெகுமதியை அறிவித்திருந்தது.

இந்தநிலையில், பெய்ரூட்டில் நடந்த வான்வழித் தாக்குதலில் அகில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார். ஹிஸ்புல்லாவின் சிறப்புப் படைகளின் தலைவராக அகிலும் பணியாற்றியதாக இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக ஹிஸ்புல்லாஹ்விடமிருந்து எந்த அறிக்கையும் வரவில்லை.

செப்டம்பர் 20, வெள்ளிக்கிழமை லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆகும். ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. இராணுவ இலக்குகளை குறிவைத்து வடக்கு இஸ்ரேலில் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது. யோவ் பாராக்ஸில் உள்ள பீரங்கி மற்றும் ஏவுகணை பட்டாலியன் மற்றும் கோட்டையில் அமைந்துள்ள வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்ததாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.

Readmore: டிரம்ப் பேரணியில் அதிர்ச்சி!. மேலாடையை கழட்டி மார்பகத்தை காட்டிய இளம்பெண்ணின் செயலால் பரபரப்பு!. வைரலாகும் வீடியோ!

English Summary

Israel attack! 9 people were killed, including a top Hezbollah commander!.

Kokila

Next Post

கடந்த 3 ஆண்டில் 5,08,055 பேருக்கு வேலை..! அடுத்த 2 ஆண்டுகளில் 75,000 இளைஞர்களுக்கு அரசு வேலை...!

Sat Sep 21 , 2024
5,08,055 people got jobs in the last 3 years..! Employment for 75,000 youth in next 2 years

You May Like