உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட சிறு தகராறு அக்கம்பக்கத்தினருக்கு இடையே மோதலாக மாறி, 4 பெண்கள் பலத்த காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கவலைக்கிடமான நிகழ்வு அப்பகுதியில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சமூக நல்லிணக்கமின்மை பற்றிய கவலையை எழுப்பியுள்ளது.
ஹர்தௌரி காட் பகுதியில் உள்ள கன்ஷி ராம் காலனியில் குழந்தைகளுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இந்த தகறாரில் பூரி குப்தா (70), கௌரி குப்தா (45), குஷி குப்தா (18) மற்றும் சஞ்சல் குப்தா (12) ஆகியோர் அண்டை வீட்டாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர், அந்தரங்க உறுப்புகள் மற்றும் கண்களில் மிளகாய்ப் பொடிகளால் தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டனர்.
அந்த வீடியோவில் தாக்குதலுக்கு ஆளான பெண்கள் கூறுகையில், “எங்கள் மீது தடிகளாலும் கம்பிகளாலும் இரக்கமின்றி தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல்காரர்கள் மற்ற ஆண்களையும் சேர்ந்து எங்களைத் தாக்க அழைத்தார்கள். எங்களின் கண் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் பொடியை தட்டி கொடுமையான முறையில் தாக்கினார்கள்” எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்வாலி நகர் காவல் நிலையத்தில் பண்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.
Read more ; லிப்ஸ்டிக் போடாதீங்க.. சொல்லியும் கேக்கல..!! மேயர் பிரியாவின் தபேதார் பணி இடமாற்றம்..!! என்ன விவகாரம்?