fbpx

Today Gold Rate | மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 உயர்வு..!! இன்றைய நிலவரம் இதோ..

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது. ஆனால் தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அக்டோபர் மாதத்தின் முதல் நாளான நேற்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. ஒரு சவரன் ரூபாய் 56,400க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை தொடர் உயர்வை கண்டு வந்த நிலையில், 2 நாட்களாக சற்று குறைந்ததால் இல்லத்தரசிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆறுதல் அளித்தது.

ஆனால், இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 50 அதிகரித்து 7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 8 கிராம் (ஒரு சவரன்) ஆபரணத் தங்கம் ரூபாய் 400 அதிகரித்து, ரூபாய் 56,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் தொடர் விலையேற்றம், தங்க நகை வாங்க எண்ணிய மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை மீண்டும் ஏற்றத்தைச் சந்திக்குமா என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதேசமயம், வெள்ளி விலையைப் பொறுத்தவரை, விலை மாற்றமின்றி கிராம் ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.1,01,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; இந்திய ரயில்வே துறையில் 14,298 காலியிடங்கள்…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

English Summary

The price of 22 carat jewelery rose by Rs 400 per pound in Chennai today to Rs 56,800 per pound.

Next Post

காந்தி ஜெயந்தி 2024 : சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மாவின் மனைவி கஸ்தூரிபா எப்படி பங்கு வகித்தார்?

Wed Oct 2 , 2024
Mahatma Gandhi is one of the greatest names in the history of the Indian freedom struggle, someone who changed the mode of protests in our country with Satyagraha and Ahimsa.

You May Like