fbpx

அந்த ஹீரோ நைட் 12 மணிக்கு கதவ தட்டி படுக்கைக்கு அழைப்பார்..!! – தசாவதாரம் பட நடிகை பகீர் குற்றசாட்டு

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மல்லிகா ஷெராவத் 2003-ம் ஆண்டு க்வாஹிச் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் மர்டர் படத்தின் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து ஆப் கா சுரூர், வெல்கம், டபுள் உள்ளிட்ட வணிக ரீதியில் வெற்றி பெற்ற படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து முன்னணி நடிகையாக மாறினார் மல்லிகா ஷெராவத். இவர் தமிழில் தசாவதாரம் படத்தில் நடித்திருப்பார்.

மேலும் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்ற வெகுசில பாலிவுட் நட்சத்திரங்களில் மல்லிகா ஷெராவத்தும் ஒருவர். ஹ்ளிஸ், பாலிடிக்ஸ் ஆஃப் லவ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்தார். இந்த நிலையில் தனது காஸ்டிங் கவுச் அனுபவம் குறித்து மல்லிகா ஷெராவத் பகிர்ந்துள்ளார். பாலிவுட்டில் பல நடிகைகள் பாலியல் துன்புறுத்தல் பற்றி வெளிப்படையா பேசி வருகின்றனர். பல நடிகைகள் தங்கள் சக நடிகர்களின் நடத்தை குறித்தும் வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தன்னுடன் நடித்த பிரபல நடிகரின் பாலியல் அத்தூமிறலை பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த பேட்டியில், “நான் துபாயில் ஒரு பெரிய படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன், அது மல்டி ஸ்டாரர் படம். அந்த படம் மிகப் பெரிய வெற்றியானது, மக்கள் இதை மிகவும் விரும்பினர், நான் இதில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளேன். அந்தப் படத்தின் ஹீரோ இரவு 12 மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டினார். நான் கதவை திறக்க மறுத்த போது கதவை உடைத்து உள்ளே வந்தார். பாலியல் சீண்டலில் ஈடுபட்டு என்னை படுக்கை அறைக்கு அழைத்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். அதன் பிறகு அந்த ஹீரோ என்னுடன் பணியாற்றவே இல்லை’ என்றார்.

பாலிவுட்டில் குவாஹிஷ் மற்றும் மர்டர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மல்லிகா ஷெராவத் மிகவும் பிரபலமானார். இப்போது இவர் ராஜ்குமார் ராவ் உடன் இணைந்து விக்கி வித்யா கா வோ திரைப்படத்தில் நடித்துள்ளார். அக்டோபர் 11ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஆலியா பட் மற்றும் வேதாங் ரெய்னா நடித்துள்ள ஜிக்ராவுடன் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது.

Read more ; ரூ.4000 க்கு மேல் மின் கட்டணம்.. இனி கவுண்டர்களில் செலுத்த முடியாது..!! – மின்சார வாரியம்

English Summary

When Mallika Sherawat Revealed She Was Harassed By ‘Hero Of Comedy Film’: Used To Knock On My Door At Midnight…

Next Post

அக்கா - தங்கையை திருமணம் செய்த பிரபல தமிழ் நடிகர்..!! யாரும் பார்த்திராத புகைப்படம்..!!

Fri Oct 4 , 2024
Navrasa hero Karthik is married to both his elder sister and younger sister, and the picture is now going viral.

You May Like