fbpx

ஸ்பெஷல் சலுகையுடன் உள்ளே வந்த விஜய் சேதுபதி மகள்.. முதல் நாளே எலிமினேட்? அட இதுதான் காரணமா..

மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கோலாகலமாக ஆரம்பமானது. இம்முறை புதிய தொகுப்பாளர், பெரிய வீடு எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸோடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.

பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட வீட்டை சுற்றி காண்பித்து போட்டியாளர்களை வரவேற்ற விஜய் சேதுபதி, இதில் எந்த சீசனிலும் இல்லாத வகையில் முதலில் 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் நடைபெற இருக்கிறது என கூறி நேற்றைய எபிசோட்டை முடித்தார். இதனிடையே, வீட்டிற்கு நடுவே சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசு கிழித்த கோடு போல் ஒன்று போடப்பட்டுள்ளது. அதில், கோட்டுக்கு ஒருபுறம் பெண்கள் அணியும், மற்றொரு புறம் ஆண்கள் அணியும் பிரிந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போட்டியாளர்களே தேர்வு செய்ய வேண்டும்.

இல்லையெனில், அனைவரும் வெளியே படுத்து தூங்க வேண்டும் என ஆரம்பத்திலேயே ஆட்டத்தை ஆரம்பித்தது பிக்பாஸ். பின் மெல்ல மெல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவர்களை பெண்கள் அணிக்கு பிங்க் ரூம் தான் வேண்டும் என சமாதானம்படுத்தியது. அத்துடன் இதற்காக ஆண்கள் அணி கூறிய நிபந்தனையையும் ஏற்றது எனக் கூறியது. அந்த நிபந்தனை என்னவென்றால், பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணி கூறும் ஏதாவது ஒரு வாரம் பெண்கள் அணி எந்த ஆண்களையும் நாமிநேட் செய்யக்கூடாது என்பதே. ரூமிற்காக முதலில் இதற்கு பெண்கள் அணியில் இருந்த சச்சனா, ஆனந்தி, சுனிதா, தர்ஷா குப்தா போன்றோர் ஒப்புக் கொண்டனர்.

ஆனால், பின்னால் வீட்டிற்குள் வந்த பவித்ரா, தர்ஷிகா, ஜாக்குலின் ஆகியோர் ஆண்கள் அணியின் நிபந்தனைக்கு ஒத்துப் போகவில்லை. இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் புகைச்சல் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியேறும் போட்டியாளர் யார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா தான் இன்று எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்போடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சாச்சனா முதல் நாளே எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Read more ; மெரினாவில் வான் சாகசம்.. திமுக அரசிற்கு மக்களின் மீது அக்கறை இல்லை..!! – விசிக ஆதவ் அர்ஜுனா கண்டனம்

English Summary

While Bigg Boss Tamil season 8 started on Vijay TV yesterday in a grand manner, Sachana, who played Vijay Sethupathi’s daughter, was eliminated on the first day.

Next Post

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் + கருணைத் தொகை...! தமிழக அரசுக்கு கடிதம்...

Mon Oct 7 , 2024
25 percent bonus + gratuity for transport workers

You May Like