fbpx

சந்திரயான்-3 வெற்றி!. உலக விண்வெளி விருதை பெற்றார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்!.

Chandrayaan-3: சந்திரயான்-3 வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் 2024ம் ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் உலக விண்வெளி விருது இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3, கடந்த ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து ஏவப்பட்டு, ஆகஸ்ட் 23 ஆம் தேதி தென் துருவத்தின் அருகே வெற்றிகரமாக தரையிறங்கியது. இது உலகளவில் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இந்தநிலையில், இந்த வெற்றியை அங்கீகரிக்கும் வகையில், விருது வழங்கப்பட்டுள்ளது.

உலக விண்வெளி விருது வழங்கும் விழா இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் நடந்தது. இதில் சந்திரயான் 3 பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சந்திரனின் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கிய முதல் வரலாற்று சாதனையை குறிக்கும் வகையிலும் வேர்ல்ட் ஸ்பேஸ் விருதை வழங்கி கவுரவித்தது.

இந்த விருதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெற்றுக்கொண்டார். மேலும் இஸ்ரோவின் சந்திரயான்3 திட்டத்துக்கு சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த பணியானது விஞ்ஞான ஆர்வம் மற்றும் செலவு குறைந்த பொறியியலின் ஒருங்கிணைப்பை எடுத்து காட்டுகிறது என்று இந்திய விண்வெளி கூட்டமைப்பு பாராட்டியுள்ளது.

Readmore: ரெட் அலெர்ட்!. சென்னைக்கு அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு!.

English Summary

ISRO’s Somanath Receives IAF World Space Award For Chandrayaan-3 Success

Kokila

Next Post

உறுப்புகளை செயலிழக்க செய்யும் மர்ம வைரஸ்!. சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

Tue Oct 15 , 2024
China Uncovers A Mysterious Tick Disease Which Causes Multiple Organ Dysfunction; How To Protect Yourself?

You May Like