fbpx

அளவுக்கு அதிகமான கஞ்சா..!! தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞர் மர்ம மரணம்..!! தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக கஞ்சா புகைத்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், போதை ஊசி போட்டுக் கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார். அந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு வார காலம் கூட முடியாத நிலையில், சென்னை பெரம்பூரில் போதை ஊசி செலுத்திக் கொண்ட 3 பேர் மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் அளவுக்கதிகமாக கஞ்சா பயன்படுத்திய இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக உருமாறி வருகிறதோ என்கிற பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மீளவிட்டான் வி.எம்.எஸ்., நகர் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு வாலிபர் சடலம் கிடப்பதாக இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் சக்திவேல் (18) என்பது தெரியவந்தது. இவர் கடல் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். கஞ்சா பழக்கம் இருந்ததால் அவரது தாயார் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அவர், அளவுக்கு அதிகமாக கஞ்சா அடித்துவிட்டு தண்டவாளத்தில் படுத்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் இருப்பது ஏன் தெரியுமா..? இதனால் என்ன பயன்..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

The incident of the death of a teenager who smoked an overdose of ganja in Tuticorin has caused great shock.

Chella

Next Post

வாரணாசி கங்கை நதியில் புதிய ரயில்-சாலை பாலம்..!! - மோடி அமைச்சரவை ஒப்புதல்

Wed Oct 16 , 2024
Prime Minister Narendra Modi-led Union Cabinet today (October 16) has approved a new rail-cum-road bridge in Varanasi across the Ganga River.

You May Like