fbpx

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! அகவிலைப்படி 53% ஆக உயர்வு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமாக இருந்த அகவிலைப்படி உயர்வு 53 சதவீதமாக உயர்த்தி வழங்கி முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி, ஜுலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதில் இரண்டாம் அகவிலைப்படியான ஜுலை மாதம் உயர்த்த வேண்டியது. பெரும்பாலும் தீபாவளி பண்டிகையை கணக்கில் கொண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாத்ததில் அகவிலைப்படி அறிவிக்கப்படும்.

அப்படி காலம் தாழ்த்தி அறிவிக்கப்படும்போது ஜூலை மாதம் முதல் அறிவிப்பு வெளியான மாதம் வரை முன் தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும். இது அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வழிவகுக்கும். அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை மாதம் அறிவிக்கப்பட வேண்டிய அகவிலைப்படி அக்டோபர் 16ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 50 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, இந்த 3 சதவீத உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 53 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமாக இருந்த அகவிலைப்படி உயர்வு 53 சதவீதமாக உயர்த்தி வழங்கி முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ‘இனிமே தான் பிக்பாஸில் ஆட்டமே இருக்கு’..!! வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே செல்கிறார் அர்ணவ் முன்னாள் மனைவி..?

English Summary

Chief Minister Mukherjee Stalin has announced that Tamil Nadu government employees have been given a 53 percent increase in salary from 50 percent.

Chella

Next Post

பண்ணை வீட்டில் 3 நாட்களாக அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம்..!! சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் புகார்..!!

Fri Oct 18 , 2024
I was locked up for 3 days from the night of 2nd to 4th and gang-raped by all 4 people.

You May Like