fbpx

காட்டு யானைகள் மீது மோதிய ரயில் தடம் புரண்டு விபத்து..!! 2 யானைகள் பலி..

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதிய எரிபொருள் ரயில் தடம்புரண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கு எரிபொருள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது 20க்கும் மேற்பட்ட யாளைகளுடன் காட்டு யானைக் கூட்டம் திடீரென தண்டவாளத்தை கடந்துள்ளது.

அந்த நேரத்தில் ரயில் 10 மீட்டர் தொலைவில் இருந்துள்ளது. யானைக் கூட்டம் தண்டவாளத்தை கடப்பதை கவனித்த லோகோ பைலட், உடனடியாக ரயிலை நிறுத்த பிரேக் போட்டுள்ளார். இருப்பினும் ரயில் யானைக் கூட்டத்தின் மீது மோதியது. இந்த விபத்து அதிகாலை 3:30 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்தில் எரிபொருளை ஏற்றிச் சென்ற 4 டேங்கர்கள் தடம்புரண்டன. மேலும் விபத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்ததுடன் மேலும் சில படுகாயமடைந்துள்ளது.

விபத்து காரணமாக ரயில் பாதைகளுக்கும் சேதம் ஏற்பட்டது. இதனால் கொழும்பு – மட்டக்களப்பு பிரதான பாதையின் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  ரயில் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கி உள்ளதாகவும், விபத்துக்குள்ளான போது ரயில் அதீத வேகத்தில் பயணித்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இலங்கை இரயில்வே தெரிவித்துள்ளது.

Read more ; பெரும் சோகம்… திமுக முக்கிய புள்ளி தாய் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!

English Summary

Fuel train derails in Sri Lanka after collision with wild elephants

You May Like