fbpx

Bigg Boss 8 | அர்ணவ் போல் வன்மத்தை கக்கிய தர்ஷா.. குறுக்கிட்ட விஜய் சேதுபதி.. ஷாக் ஆன பெண் போட்டியாளர்கள்..!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. முதன்முறையாக கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 18 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் 9 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் வார இறுதியில் ரவீந்தர் சந்திரசேகரும், இரண்டாவது வார இறுதியில் அர்னவ்வும் எலிமினேட் செய்யப்பட்டனர்.

இதையடுத்து தற்போது எஞ்சியுள்ள 16 போட்டியாளர்கள் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்த வாரம் நடந்த நாமினேஷனில் முத்துக்குமரன், செளந்தர்யா, அருண் பிரசாத், சத்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா குப்தா, பவித்ரா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். பெண்கள் அணியில் பவித்ராவிற்கு நாமினேஷன் பாஸ் வழங்கி சேவ் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வார எலிமினேஷனில் தர்ஷா வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட அர்னவ், ஆண்கள் அணியை மேடை வரம்பை மீறி விமர்சித்து வெளியேறினார். அவரை விஜய் சேதுபதி கண்டித்து அனுப்பி வைத்தார். இதனிடையே, நேற்று வெளியேறிய தர்ஷா குப்தாவும், பெண்கள் அணியில் குழு போன்று ஆட்கள் சேர்ந்துகொண்டு பிறரை ஒதுக்குவதாகவும் தெரிவித்து இருந்தார். இவரின் பேச்சு அப்பட்டமாக அர்னவை போலவே இருந்ததாகவும், அர்னவ் கோபத்தில் கத்திவிட்டு சென்றாலும், இவர் வன்மத்தில் கக்கிவிட்டு செல்வதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. மக்கள் மத்தியில் இவ்வாறான விஷயங்கள் என்பது எதிர்மறை தோற்றத்தையே வழிவகை செய்யும் என்பதால், மேடை நாகரீகத்தை போட்டியாளர்கள் இழந்து வருகின்றனர்.

Read more ; பண்டிகை சீசன் வந்தாச்சு!. பட்டு புடவைகளை பராமரிக்க இந்த எளிய டிப்ஸை பின்பற்றுங்கள்!

English Summary

Darsha who was as mad as Arnav.. Vijay Sethupathi interrupted.. Shocked female contestant.

Next Post

மாஸ்டர் பிளான்..!! கள்ளக்காதலியை கொன்று ஆட்சியர் வீட்டருகே புதைத்த காதலன்..!! சினிமா பாணியில் அதிரவைக்கும் சம்பவம்..!!

Mon Oct 28 , 2024
Vimal Soni has had an affair with Ekta Gupta, the wife of a stockbroker.

You May Like