fbpx

புதிய டிவி சேனலை தொடங்கும் தவெக தலைவர் விஜய்..!! என்ன பெயர் தெரியுமா..?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தவெக கட்சி செய்திகளையும், உள்ளதை உள்ளபடி காட்ட புதிய டிவி சேனலை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியலை புரட்டிப் போட்டது. மாநாட்டை தொடர்ந்து 2026 தேர்தலை எதிர்கொள்ள தவெக தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார்.

விரைவில் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்தார். அந்த அணிகளில் இடம் பெற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் 27ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான பயண விவர தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கி, நெல்லையில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த மாவட்டத்திற்கு விஜய் செல்கிறாரோ, அந்த மாவட்டத்தில் தங்கியிருந்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில், முழு அரசியல்வாதியாக மாறி இருக்கும் விஜய், முதல் முறையாக டிவி சேனலை ஆரம்பிக்க உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, கோட்பாடு, அதன் பற்றி செய்திகள் விரைவாகவும், உள்ளதை உள்ளபடி காட்ட வேண்டும் என்ற முனைப்போடு புதிய டிவி சேனலை ஆரம்பிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் புதிய விண்ணப்பத்தை கொடுத்து, அதற்காக காத்திருந்து, அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா? என எதிர்பார்ப்பதை விட, இருக்கும் பழைய சேனலை வாங்க முடிவெடுத்துள்ளார். அதன்படி, அவர் வாங்கும் சேனலுக்கு வாகை டிவி என பெயர் சூட்ட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : பெற்றோர்களின் கவனக்குறைவால் பலாத்காரம் செய்யப்பட்ட 3 வயது குழந்தை..!! கொலை செய்து உடலையும் எரித்ததால் அதிர்ச்சி..!!

English Summary

Tamil Nadu Victory Kazhagam President Vijay has decided to start a new TV channel to show Thaveka party news and content as it is.

Chella

Next Post

கோயிலுக்கு சென்ற 2 குழந்தைகள் நரபலி..? சாலையோரம் கிடந்த உடல்கள்..!! அதிர்ச்சி தகவல்..!!

Sat Nov 2 , 2024
Police were informed about the suspicious death of 2 children in Deoband area of ​​Saharanpur district.

You May Like