fbpx

என் மருமகளை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்.. ஆனா இந்து சொன்ன வார்த்தை..!! – ரியல் அமரனின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் தீபாவளி ரிலீசாக வெளியாகி வசூல் ரீதியாகவும், திரை விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே இப்படத்தின் கதை என்பது அனைவருக்கும் தெரியும்.

படம் வெளியான பின்னரும் பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் மறைந்த மேஜர் முகுந்த் தந்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்தும் தனது மகனின் மரணம் குறித்து பல விஷயங்களை மிகவும் எமோஷனலாக பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “என்னுடைய மருமகள் இந்து ரொம்ப பாவம்.. நான் சொன்னா நம்ப மாட்டீங்க. நான் அவளை திரும்ப கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு சொன்னேன். இந்துவோட அப்பா கிட்ட… சார் இப்போ 31 வயசு தான் ஆகுது இந்துவுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கலாம் அப்படின்னு நான் சொன்னேன்.

அப்போ இந்து உடனே என்கிட்ட… அப்பா நான் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன் அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா? நோ… அப்படின்னு சொன்னா! அது ரொம்ப பெருமைக்குரிய விஷயம் என மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை கண்ணீர் மல்க அந்த பேட்டியில் கூறி இருந்தார் .அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக நாட்டுக்காக மேஜர் முகுந்த் உயிர் தியாகம் செய்திருக்கும் நிலையில் அவரது மனைவி முகுந்திற்காக எவ்வளவு சேக்ரிஃபைஸ் பண்ணி இருக்கிறார் என்பது மக்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. அதே நேரத்தில் அவரை பெருமைப்படவும் வைத்திருக்கிறது.

Read more ; தமிழகம் முழுவதும் ப்ரீபெய்ட் மின்கட்டண மீட்டர் மூலம் மாதாந்திர கணக்கீட்டு முறை…!

English Summary

I asked my daughter-in-law to get married again.. But what Hindu said..!! – Major Mukund’s father tearfully interviewed

Next Post

13 வயதில் கர்ப்பம்.. 8 ஆம் வகுப்பு சிறுமியை நண்பர்களுக்கு இரையாக்கிய இளைஞன்.. பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?

Sun Nov 3 , 2024
The young man who preyed on the 8th class student to his friends..

You May Like