fbpx

இப்படி முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாது.. அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

உருளைக்கிழங்கு நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்களில் ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். மார்க்கெட்டில் எந்த காய்கறி வாங்குறோமோ இல்லையோ மறக்காமல் உருளக்கிழங்கு வாங்குவோம். உருளைக்கிழங்கின் ஒரு நன்மை என்னவென்றால், இது மற்ற காய்கறிகளைப் போல சீக்கிரம் கெட்டுப்போகாது. அதனால் தான் அதிகளவில் இதை வாங்குகிறார்கள்.

ஆனால், ஆனால் நீண்ட நாள் அவை தானாக முளைக்க ஆரம்பித்து விடும். இது அலட்சியப்படுத்திவிட்டு நாம் அதை சமைக்கிறோம். ஆனால், அவ்வாறு செய்வது நம் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். முளைத்த உருளைக்கிழங்கு சாப்பிடுவது ஃபுட் பாய்சனுக்கு சமம். எனவே, முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது ஏன் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

TOI இல் வெளியிடப்பட்ட ஒரு செய்தியின்படி, உருளைக்கிழங்கு ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை வெளிப்படுத்தும் போது முளைக்க ஆரம்பிக்கும். இந்த செயல்முறை உருளைக்கிழங்கு வளர்ச்சி சுழற்சியின் இயற்கையான பகுதியாகும். சமையலறை, நேரடி வெளிச்சம் உள்ள இடங்களில் உருளைக்கிழங்கை சேமித்து வைக்கும்போது தளிர்விட்டு முளைக்க ஆரம்பிக்கிறது. இருப்பினும், முளைக்கும் இந்த செயல்முறை தீங்கு விளைவிப்பதில்லை. இதன் காரணமாக உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்களில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது வைட்டமின் சி மற்றும் கார்போஹைட்ரேட்டுகளில் சிறிதளவு குறைவதற்கு வழிவகுக்கும், ஏனெனில் இது புதிய தளிர்களின் வளர்ச்சியை ஆதரிக்க சேமித்த ஊட்டச்சத்துகளைப் பயன்படுத்துகிறது. இருப்பினும், சில நேரங்களில் சில நச்சு கலவைகள் முளைத்த உருளைக்கிழங்கிலும் உருவாகலாம்.

முளைத்த உருளைக்கிழங்கின் சத்துக்கள் மற்றும் பக்கவிளைவுகள்:

உருளைக்கிழங்கு முளைத்தாலும், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பி6 போன்ற பல சத்துக்களை அதிலிருந்து பெறலாம். இருப்பினும்,  இயற்கையாகவே சோலைனன் மற்றும் காகோனின் ஆகிய இரண்டு நச்சு பொருட்கள் உருளை கிழங்கில் உள்ளன. இருப்பினும் ஆரம்பத்தில் உருளைக்கிழங்கில் அதன் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால், பின்னர் இந்த உருளைக்கிழங்கு முளைக்க தொடங்கும் போது, அதில் உள்ள இந்த இரண்டு விஷத்தை தனிமங்கள் அளவும் அதிகரிக்க தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

முளைத்த உருளைக்கிழங்கை எவ்வாறு உட்கொள்வது..?

* உருளைக்கிழங்கில் ஏதேனும் முளைகள் அல்லது அதிக வண்ண பாகங்கள் இருந்தால், அவற்றை முழுவதுமாக வெட்டி அகற்றவும்.

* தோலை உரித்த பிறகே பயன்படுத்தவும். இது தீங்கு விளைவிக்கும் கிளைகோல்கலாய்டுகளின் அளவைக் குறைக்கிறது. இந்த கலவை தோலுக்கு கீழே உள்ள பகுதியில் அதிக அளவில் உள்ளது.

* உருளைக்கிழங்கு மென்மையாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் இருந்தால், அதை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இவை அனைத்தும் உருளைக்கிழங்கு மோசமாகிவிட்டதைக் குறிக்கிறது.

* நீங்கள் உருளைக்கிழங்கை எவ்வளவு முழுமையாக சமைக்கிறீர்களோ, அவ்வளவு குறைவாக கிளைகோல்கலாய்டுகளின் உள்ளடக்கம் இருக்கும். அதிக வெப்பநிலையில் உருளைக்கிழங்கை வேகவைப்பது, சுடுவது அல்லது வறுப்பது நச்சு அளவைக் குறைக்கும்.

உருளைக்கிழங்கு முளைப்பது தடுப்பது எப்படி?:

  • உருளைக்கிழங்கை எப்போதும் ஈரமான இடத்தில் வைக்காமல், உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
  • உருளைக்கிழங்கு எப்போதும் இருண்ட மற்றும் குளிர்ந்த, காற்றோட்டமான இடத்தில் வைக்கவும்.
  • காகிதப்பை அல்லது காட்டன் பேக் இருந்தால் அதில் உருளைக்கிழங்கை கட்டி வைக்கவும்.
  • உருளைக்கிழங்கை ஒருபோது வெங்காயத்துடன் வைக்க வேண்டாம்.
  •  அதுபோல உருளைக்கிழங்கு சூரிய ஒளியிலிருந்து விலைக்கு வையுங்கள். இல்லையெனில் அது முளைக்க ஆரம்பித்து விடும்.

Read more ; கிரெடிட் கார்டு..!! தொகையை செலுத்த தவறினால் என்ன நடக்கும் தெரியுமா..? விதிமுறைகள் இதோ..!!

English Summary

You should never eat sprouted potatoes like this.. What will happen if you eat them like that? Find out now

Next Post

'அங்கிள்னு கூப்பிடாத' சொல்லியும் கேட்கல.. ஜவுளி கடை உரிமையாளரை கடுமையாக தாக்கிய வாடிக்கையாளர்..!!

Tue Nov 5 , 2024
An enraged customer thrashed a textile shop owner near Bhopal after his wife had earlier called him uncle, uncle.

You May Like