வெங்காயம் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையுமா? என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தியாவின் மிக எளிதில் சகாயமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று வெங்காயம். வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் ஆகியவை இருக்கிறது. இதனால், சர்க்கரை உயர்தலை கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.
எனவே, சர்க்கரை நோயாளிகள் தாராளமாக வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மேலும், வெங்காயத்தை சாப்பிடுவதால் உடல் சூடு ஆகாது என்றும் வெப்பத்தை ஏற்படுத்தாது என்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை நிலையான வைத்திருக்க உதவும் என்றும் சொல்லப்படுகிறது.
வெங்காயத்தில் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் அதில் உள்ள சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது. மேலும், வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.
மேலும், வெங்காயத்தில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், குறிப்பாக ஆன்தோசயனின் மற்றும் கொர்சிட்டின், செல்களின் அழற்சியை குறைத்து சர்க்கரை நோய், இதய நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்கிறது. குறிப்பாக, வெங்காயத்தில் உள்ள ஆனயானின் ஏ என்ற சல்பர் உள்ள வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.