தமிழ்நாட்டு மின்சார வாரியம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வீடுகளுக்கு அருகே உள்ள மின் கம்பங்களை மாற்றுவதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டுமா? வீட்டின் மேலே செல்லும் மின் கம்பிகளை, வீட்டு மனை / நிலத்தில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க இணைய வழியில் விண்ணப்பியுங்கள். இதற்காக இணைய முகவரி: https://app1.tangedco.org/nsconline/mobval.xhtml?apl=DCW3ஐ கிளிக் செய்து கோரிக்கைகளை முன் வைக்கலாம் என்று மின்சார வாரியம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இது போக தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்க கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது, இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, இனி வீடு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
விண்ணப்பம் கொடுத்த உடனே மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கு கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவையில்லாத பட்சத்தில் மூன்றே நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் 7 நாட்களுக்குள் கட்டாயம் மின் இணைப்பு வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More : உடலுக்கு வலு சேர்க்கும் முருங்கைக் கீரை சட்னி..!! வாரத்தில் 2 முறை போதும்..!! இப்படி டிரை பண்ணி பாருங்க..!!