ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என விதிகள் இருந்து வந்த நிலையில், இதில் குழப்பம் இருப்பதாகவும், இதனை விளக்கி புதிய அறிவிப்பு வெளியிட வேண்டுமென மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆதரவற்ற விதவைகளுக்காக தமிழக அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழக அரசின் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகையை பெற இதற்கான சான்றிதழை பெற வேண்டும். இதில் குழப்பம் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்பதற்கு, மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அர்த்தமா? என்று கேள்வி எழுந்தது. இது குறித்து சிபிஎம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதில், “மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆதரவற்ற விதவைகளுக்கு தமிழ்நாட்டில் கோட்டாட்சியர்/ சார் ஆட்சியர் நிலையில் ஆதரவற்ற விதவை சான்று வழங்கப்பட்டு வருகிறது. அச்சான்று வழங்குவதற்கு எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பது போன்ற பொருத்தமில்லாத நிபந்தனைகளை தளர்வு செய்து, ஏழை எளியவர்களுக்கு எளிதாக சான்று கிடைத்திட வழிவகை செய்யுமாறு கோரியுள்ளார். இதன் அடிப்படையில், ஆதரவற்ற விதவை சான்று வழங்குவதற்கு அரசு, கடிதத்தில் கீழ்க்கண்டவாறு தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.
“இதுதொடர்பாக அரசாணை (நிலை) எண் 225, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் (எம்) துறை, நாள் 08.03.1984-ல், The expression “destitute widows” is defined as one who has neither any means by herself to live on nor any dependent to protect her from starvation என வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆதரவற்ற விதவை சான்று வழங்குவதற்கு எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பதற்கு மகன் / மகள் ஆகியோர் துணையில்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.
அவர்கள் இருந்தும் அவர்களால் ஆதரவற்ற விதவையின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அணுகூலமும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையில் இருப்பது என்றே பொருள்படும்” என தமிழ்நாடு அரசு விளக்கம் aளித்துள்ளது.
Read More : ”விண்வெளி நாயகா”..!! தக் லைஃப் படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! வெளியானது படத்தின் டீசர்..!!