fbpx

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரே நாளில் ரூ.680 உயர்வு..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28ஆம் தேதி ஒரு பவுன் ரூ.50,000 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்டது.

இதனால் அன்றைய தினம் சவரனுக்கு ரூ.2,080 குறைந்தது. பின்னர், தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக, தீபாவளியன்று ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. பின்னர், ஏற்ற இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை, நேற்று (நவ.7) அதிரடியாக குறைந்தது. அதன்படி, பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,280-க்கு விற்பனையாகிறது. இதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.103-க்கு விற்கப்படுகிறது.

Read More : இந்த ஒரு ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் அடுத்த லட்சாதிபதி நீங்கள் தான்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

In Chennai, the price of 22 carat jewelery rose by Rs 85 per gram today to Rs 7,285 per gram.

Chella

Next Post

இந்த வகை நபர்கள் வேலையின் போது அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்..!! - ஆய்வில் தகவல்

Fri Nov 8 , 2024
This type of person experiences more stress at work compared to others

You May Like