fbpx

இது யாருக்கு பிறந்த குழந்தை..? கணவருக்கு திடீரென வந்த சந்தேகம்..!! பர்த்டே பார்ட்டில் நடந்த ட்விஸ்ட்..!! DNA-வில் அதிர்ச்சி..!!

வியட்நாமில் ஒருவருக்கு தனது மகள் தன்னை போலவோ, தன் மனைவியை போலவோ இல்லை என்ற எண்ணம் உருவாகியுள்ளது. இதனால் தனது மனைவி தனக்கு துரோகம் செய்ததாக கூறி DNA டெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்த மனைவியிடம் தினமும் கணவர் சண்டை போட்டு வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்குள்ளாகி, மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இந்த சண்டை மேலும் வளர, மனைவி ஹாங், மகள் லேனுடன் வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு குடிபெயர்ந்துள்ளார். இங்கே தான் அவர்களது வாழ்வில் ஒரு திருப்புமுனையை சந்தித்தது. லேன் சேர்ந்த புதிய பள்ளியில், அவரது வயதில் அதே பிறந்தநாள் கொண்ட வேறொரு மாணவி லேனுக்கு தோழியாகியுள்ளார்.

இருவரும் ஒரே ஊரில் பிறந்ததும் இவர்களுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் ஒரே பிறந்தநாள் கொண்டாட்டத்தை இரு குடும்பத்தினரும் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தான் அந்த தோழியினுடைய தாயார் லேனை முதல் முறையாக சந்தித்தார். லேன் தன்னை போலவே இருப்பதை அந்த தாயார் உணர்ந்தார். பிறகு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்தபோது தான் அந்த அதிர்ச்சியான தகவல் அவர்களுக்கு தெரியவந்தது.

இரு குழந்தைகளும் பிறந்தநாளன்று, மருத்துவமனையில் அந்த குழந்தைகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வந்துள்ளது. மேலும், இந்த குழப்பத்தை எப்படி கையாள்வது என்றும் அவர்கள் பேசி வருகின்றனராம். இரண்டு சிறுமிகளும் இந்த உண்மையை சொல்லி, யாருடன் இருக்க வேண்டும் என்று அவர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்களாம். மேலும், அந்த மருத்துவமனையின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Read More : ”எவ்வளவு சொல்லியும் கேட்கல”..!! பலமுறை விவாகரத்து..!! சொந்த சகோதரனுடன் கள்ளக்காதல்..!! தூக்கில் தொடங்கிய கணவன்..!!

English Summary

A man in Vietnam was told his daughter didn’t look like him, and the DNA A big truth has come out because I was asked to take the test.

Chella

Next Post

ஏற்றுமதி, இறக்குமதி பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா...? தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி...! முழு விவரம்

Wed Nov 13 , 2024
Want to know about exports and imports?

You May Like