fbpx

திடீரென அலறல் சத்தம் கேட்டது.. கையில் கத்தி இரத்த கறையோட அந்த பையன் நின்னான்..!! – நேரில் பார்த்த நோயாளிகள் பேட்டி

சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பாலாஜி. இந்த மருத்துவமனையில் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது தாய் காஞ்சனாவை புற்றுநோய் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.அங்கு அந்த பெண்ணுக்கு 6 முறை கீமோ தெரபி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சிகிச்சைகளில் விக்னேஷ் திருப்தி அடையாததால் மருத்துவர் மீது ஆத்திரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இன்றைய தினம் கத்தியுடன் வந்த விக்னேஷ், மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், டாக்டர் பாலாஜியின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து தப்பியோடிய விக்னேஷை அங்கிருந்த மருத்துவமனை காவலர்கள் துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில், மருத்துவரை கத்தியால் குத்தியதை நேரில் பார்த்த நோயாளிகள் சிலர் இது குறித்து கூறினர். 

அவர்கள் கூறுகையில், நாங்கள் சிகிச்சைக்காக வந்திருந்தோம்.. திடீரென ஒரே பரபரப்பாக இருந்தது. ஓடிவாங்க… ஓடி வாங்க என்று சத்தம் கேட்டது. என்னவென்று பார்த்தால் அங்கே ஒரு மருத்துவரை கத்தியால் குத்தியிருப்பதை பார்த்தோம். குத்தியவன் கையில் கூர்மையான கத்தி இருந்ததால், யாருமே பிடிக்க முடியவில்லை. எல்லாரும் ஒதுங்கி தான் நின்னார்கள். செக்யூரிட்டிகள் உடனே வந்தார்கள். எனினும் யாரும் அவரை பிடிக்கவில்லை. என்று கூறினர். அந்த பையன் வெளியே வந்த போது பலர் செல்போனில் வீடியோ எடுத்த படியே பின்னாலேயே சென்றனர். சிறிது தூரம் சென்ற பிறகு தான் எல்லா செக்யூரிட்டிகளும் சேர்ந்து அவனை பிடித்ததாக நோயாளியுடன் வந்தவர்கள் சிலர் கூறினர்..

Read more ; ”கண்டிப்பா ஆக்‌ஷன் எடுப்போம்”..!! ”போராட்டத்தை கைவிடுங்க”..!! மருத்துவர் விவகாரத்தில் உதயநிதி உறுதி..!!

English Summary

Some of the patients who witnessed the stabbing of a doctor at the Chennai Government Hospital, Guindy, said this.

Next Post

மருத்துவர்கள் மீதான தொடர் தாக்குதல்.. என்ன நடவடிக்கை எடுத்தீங்க முதலமைச்சரே? - கடுமையாக சாடிய அண்ணாமலை

Wed Nov 13 , 2024
Continuous attack on doctors.. What action did you take Chief Minister? - Annamalai was severely beaten

You May Like