fbpx

புரோ கபடி லீக்!. தொடக்கம் முதலே ஆதிக்கம்!. தமிழ் தலைவாஸை வீழ்த்தி அசத்தல்!. முதலிடத்தில் நீடிக்கும் ஹரியானா!.

Pro Kabaddi League: புரோ கபடி லீக் தொடரின் 59வது ஆட்டத்தில் 29-36 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் ஹரியானா முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. உ.பி.,யின் நொய்டாவில் நடந்த லீக் 59வது போட்டியில் தமிழ் தலைவாஸ், ஹரியானா அணிகள் மோதின. ஹரியானா வீரர்களை ‘ஆல்-அவுட்’ செய்த தமிழ் தலைவாஸ் அணி, முதல் பாதி முடிவில் 17-14 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணிக்கு 12 புள்ளி மட்டும் கிடைத்தது. ஹரியானா அணி 22 புள்ளி பெற்றது.

ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 29-36 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தமிழ் தலைவாஸ் அணிக்கு மொயின் ஷபாகி (7 புள்ளி), கேப்டன் நரேந்தர் (4) கைகொடுத்தனர். ஹரியானா சார்பில் வினய் 10, ஷிவம் 6 புள்ளி பெற்றனர். தமிழ் தலைவாஸ் அணி 11 போட்டியில், 4 வெற்றி, ஒரு ‘டை’, 6 தோல்வி என 28 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஹரியானா அணி முதலிடத்தில் (41 புள்ளி) நீடிக்கிறது. இதேபோல் 60வது லீக் ஆட்டத்தில் 30-28 புள்ளிகள் என்ற கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் அணி, புனேரி அணியை வீழ்த்தியது.

Readmore: ஊரடங்கிலும் போர்க்களமான மணிப்பூர்!. மீண்டும் கலவரங்கள், தீவைப்பு!. கூட்டணி கட்சிகளின் திடீர் முடிவு!. அதிர்ச்சியில் பாஜக!

English Summary

Pro Kabaddi League!. Dominate from the start! Beating Tamil Thalaivas is amazing! Haryana remains at the top!

Kokila

Next Post

கன்னி ராசிக்காரர்களே.. உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் என்ன தெரியுமா?

Mon Nov 18 , 2024
Virgos.. Do you know what colors bring you luck?

You May Like