fbpx

மாஞ்சா நூலில் பட்டம் விட்ட மாணவர்கள்..!! குழந்தையின் கழுத்தை அழுத்ததால் பரபரப்பு..!! சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மாஞ்சா நூல் அறுத்து இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மனைவி மற்றும் தனது குழந்தையுடன் வியாசர்பாடி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மாஞ்சா நூல் அறுத்து இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. குழந்தைக்கு 7 தையல் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாஞ்சா நூலில் பட்டம் விட்ட கல்லூரி மாணவர், பள்ளி மாணவர் உள்ளிட்ட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். மாஞ்சா கயிறு அறுந்து, பாதிக்கப்படும் சம்பவம் இனிமேல் நடக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : கடனை திருப்பி செலுத்தாத பெண்ணை வீடியோ காலில் வரவழைத்து..!! போலி பிடிவாரண்ட்..!! சிக்கிய மேலாளர்..!!

English Summary

A two-and-a-half-year-old boy’s neck was injured when he cut mancha thread while riding a two-wheeler on the Vyasarpadi flyover, causing a stir.

Chella

Next Post

பிரசவ வார்டுகள் நிரம்பி வழிகிறது.. இந்திய பெண்கள் குழந்தை பெறவே இங்கு வருகிறார்கள்..!! - கனடா இளைஞரின் வீடியோவால் சர்ச்சை

Mon Nov 18 , 2024
Canadian Man Claims Pregnant Indian Women Fly To Canada For Free Births, Sparks Outrage

You May Like