சேலம் நாம் தமிழர் கட்சி செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபகாலமாக நாதகவில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருவது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில், நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அப்படியே விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார்.
இவர்கள் அனைவருமே சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதிலும், பூபாலன் விலகும்போது, நாம் தமிழரில் இருப்பவர்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்ட்டப்படிதான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் தன்னிடம் சொன்னதாகவும், அது அவருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் கூட, விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும் சீமான் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்து கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில், சேலம் நாம் தமிழர் கட்சி செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக நாதக-வில் இருந்து வந்த அழகாபுரம் தங்கம் கட்சியில் இருந்து விலகியது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Read more ; டாப் அப் ஹோம் லோன் பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா..? இதன் சிறப்பம்சங்கள் இதோ..