பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளை அவை நடந்த உடனேயே பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டமாகும். இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால், எந்த மருத்துவமனையில் குழந்தை பிறக்கிறதோ அந்த ஊரின் பதிவாளர் மூலம்தான் பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும். பெற்றோரின் வசிப்பிடத்தில் இருந்து குழந்தைகளின் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியாது.
பிறப்பு சான்றிதழ் ஏன் அவசியம்..?
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்கவும், அரசுப் பணிகளில் சேரவும், திருமணத்தை பதிவு செய்யவும், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி, பிறப்பு சான்றிதழ் ஒருவரின் அடையாளம் என்பதுடன், அதை வைத்துதான் எதிர்காலம் கணிக்கப்படுகிறது.
பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு, பெற்றோரின் திருமணச் சான்றிதழ், மருத்துவமனையில் இருந்து குழந்தை பிறந்தது குறித்து வழங்கப்பட்ட கடிதத்தின் சான்று, பெற்றோரின் அடையாளச் சான்று ஆகியவை பிறப்புச்சான்றிதழ் பெறுவதற்கு தேவையான ஆவணங்களாகும். அதேபோல, குழந்தையின் பெயர், பிறந்த தேதி, பெற்றோரின் பெயர், குழந்தை பிறந்த இடம், முகவரியில் ஏதேனும் பிழை ஏற்பட பெரும்பாலும் வாய்ப்புள்ளது. அவ்வாறு பிழை இருந்தால், அதை உடனடியாக திருத்த வேண்டும்.
இதற்கு பிறப்பு பதிவாளர் அல்லது சுகாதார ஆய்வாளர் அல்லது விஏஓ யாரேனும் ஒருவரை அணுகலாம். பிறப்பு சான்றிதழில் பிழையை திருத்த வேண்டும் என்று மனு கொடுக்க வேண்டும். அத்துடன், குழந்தையின் பெற்றோரின் அடையாள சான்று, மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்றால் டிஸ்சார்ஜ் சம்மரி போன்றவற்றை தர வேண்டும். இவைகளை சரிபார்த்து, பிழையை திருத்தி தந்துவிடுவார்கள்.
2018ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ்களை தொலைத்துவிட்டால், நீங்கள் இதற்கு முன்பு பிறப்பு சான்றிதழை எங்கு பதிவு செய்தீர்களோ, அங்கு சென்று பிறப்பு இறப்பு பதிவாளரிடம் மீண்டும் மனு கொடுத்து விண்ணப்பிக்கலாம். அப்போது, பிறப்புச் சான்றிதழின் நகல் இருந்தால் போதும். நகல் இல்லாவிட்டால், குழந்தை பிறந்த தேதி, பிறந்த இடத்தைக்கூறி விண்ணப்பிக்கலாம். ஆனால், தற்போது ஆன்லைனிலேயே சான்றிதழின் நகலை பெற்றுக்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
தொலைந்த சான்றிழ் நகலுக்காக விண்ணப்பிக்கும்போது, சில ஆவணங்களை இணைக்க வேண்டும். அதாவது, பிறப்புச் சான்றிதழின் இழப்பு அல்லது தொலைந்தது குறித்த உறுதிமொழி, விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, விண்ணப்பதாரரின் வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழின் நகலுக்கான விண்ணப்பக் கட்டணம் 50 முதல் 100 ரூபாய் வரை இருக்கும். பிறப்புச் சான்றிதழின் நகல் 15 முதல் 30 நாட்களுக்குள் பெறப்படும். ஒருவேளை உங்கள் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க வேண்டுமென்றால், உங்களது விண்ணப்ப எண்ணை கொண்டு, உங்களது உள்ளூர் மாநகராட்சி அல்லது நகராட்சியின் வெப்சைட்டை பார்வையிடலாம்.
Read More : பெண்களே..!! வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ரூ.35 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்..!! முதலீடும் கம்மிதான்..!!