Mumbai attack: மும்பை தீவிரவாத தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை போலீசார் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும்.
வருடங்கள் கடந்தாலும் இந்திய மக்கள் மனதில் ஆறாத வடுவாக மாறிப்போனது 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி. மும்பையில் கடல்வழியாக லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தி ஓபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொடூர தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர். 320க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
தீவிரவாதிகள் மூன்று நாட்கள் ஹோட்டல்களிலும் வைத்திருந்த பிணைக்கைதிகளை இந்தியாவின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிணைக்கைதிகளை விடுவித்தனர். இதனால், மும்பை தாக்குதல் இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்று சொல்லலாம். இறுதியில் இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டு 2012ம் ஆண்டு நவம்பர் 21-ம் அதிகாலையில் புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
1993-ம் ஆண்டு தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் துணையுடன் மும்பையில் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு அடுத்தபடியாக மும்பையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக 2008-ம் ஆண்டு தாக்குதல் கருதப்படுகிறது. 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்தனர்.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவத்தால் மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல், மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ்தேவ் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இப்படி ஒரு கொடூர தாக்குதல் இனி இந்தியாவிற்கு வேண்டாம் என்பதே அனைத்து மக்களின் குரலாக ஓலித்து வரும் நிலையில், காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதம் குறைந்தபாடில்லை. ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைவது பொதுமக்கள் உயிரிழப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது.
Readmore: ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் தயார்!. நிபந்தனைகளை முன்வைத்த பிரதமர் நெதன்யாகு!