உலகம் முழுவதும் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் பல்வேறு முறைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர். சிலரது பழக்கவழக்கங்கள் ஆச்சரியமாகவும், வெறித்தனமாகவும், அதிசயமாகவும் இருக்கும். ஒவ்வொரு சமூகத்தினரிடையே அடையாளமாக விளங்கும் இந்த பழக்கவழக்கங்கள் வெறும் பழக்கங்கள் மட்டுமல்ல அதற்கு பின்னால் பல பின்னணிகளும் இருக்கும். தற்போது மாறிவிட வாழ்க்கை முறையால் இதில் பெரும்பாலான பழக்கங்கள் மறைந்து விட்டது.
அந்தவகையில், 5000 வருடங்களுக்கு முன்பே தேன், மணல், முதலை சாணியை வைத்து காண்டம் கண்டு பிடிக்கப்பட்ட ஆச்சரியமான தகவல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஆணுறை என்பதே பால்வினை நோய் ஏற்படாமல் இருக்க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உபகரணம் தான். ஆனால், தொழில்நுட்பத்தில் அப்டேட் வருவது போல தான் இதிலும் அவ்வப்போது சில புதிய நன்மை அல்லது சிறந்த முறை என்று ஆணுறைகள் சந்தையில் புதிய பெயர்களில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
எத்தனை புதுமையாக இருப்பினும், தரம் உயர்வாக இருப்பினும் சில சமயங்களில் ஆணுறை பயன்படுத்தியும் கூட பால்வினை நோய் தொற்று ஏற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இதை தடுக்கவும், மேலும் பரவாமல் இருக்கவும் ஆய்வாளர்கள் நிறைய ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில், எகிப்தியர்களின் வித்தியாசமான விஷயங்களில் ஒன்று 5000 வருடங்களுக்கு முன்பே காண்டம் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
ஆணுறைகள் கண்டுபிடிப்பதற்கு முன்னால் பிறப்பு கட்டுப்பாடு எப்படி இருந்தது? பண்டைய எகிப்தில் முதலையின் சாணத்தை கருத்தடை சாதனமாக பயன்படுத்தினர். உலர்ந்த சாணம் யோனிக்குள் செருகப்பட்டது, இது உடல் வெப்பநிலையை எட்டும்போது மென்மையாகிவிடும் என்ற எண்ணம் ஒரு அசாத்தியமான தடையை உருவாக்குகிறது. மரத்துண்டு, எலுமிச்சை பகுதிகள், பருத்தி, கம்பளி, கடல் கடற்பாசிகள் மற்றும் யானை சாணம் ஆகியவை பிற நாட்களில் பயன்படுத்தப்பட்ட பிற கருத்தடை பொருட்கள் ஆகும்.
Read more ; பால் உற்பத்தியில் புதிய வரலாறு.. பணியாளர்களுக்கு போனஸ், ஊக்கத்தொகை அறிவித்த அமைச்சர்..!!