ரயில் பயணிகளின் வசதி மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய வகை துணிகள் மேம்படுத்தப்பட்ட தரத்துடன் கொள்முதல் செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. அப்போது அதானி ஊழல் விவகாரம், மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. குல்தீப் இந்தோரா கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அதில், ரயிலில் பயணிக்கும் பயணிகள் அவர்களின் படுக்கை விரிப்பு ஆகியவற்றிற்காக செலுத்தும் பணத்திற்கு ஏற்ப, கம்பளி போர்வைகள் அடிப்படை சுகாதார தரத்துடன் உள்ளனவா? அல்லது மாதத்திற்கு ஒரேயொரு முறை அவை துவைக்கப்படுகின்றனவா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்க ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ”பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
புதிய வகை துணிகள் மேம்படுத்தப்பட்ட தரத்துடன் கொள்முதல் செய்யப்படுகின்றன. அவற்றின் தரம் உறுதி செய்யப்படுகிறது. சுகாதாரத்துடன் கூடிய விரிப்புகளை பயணிகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்பதற்காக, தரம் வாய்ந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. போர்வைகளை துவைப்பதற்காக குறிப்பிட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
படுக்கை விரிப்புகள் பற்றிய புகார்களை விசாரிப்பதற்கு தனியாக கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதம் ஒரு முறை துவைக்கப்படுகின்றன. அந்த விரிப்புகளுடன் கூடுதலாக ஒரு படுக்கை விரிப்பும் வழங்கப்படுகிறது” என்று விளக்கம் அளித்தார்.
Read More : மாணவர்களே ரூ.10,000 வழங்கும் தமிழ்நாடு அரசு..!! ஜனவரி 25ஆம் தேதி தேர்வு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!