fbpx

புரோ கபடி!. குஜராத்தை அலறவிட்ட தமிழ் தலைவாஸ்!. பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையுமா?

Pro Kabaddi: புரோ கபடி லீக் தொடரில் குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணியை 40-27 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.

புனேயில் நடந்த புரோ லீக் தொடரின் 95வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், குஜராத் அணிகள் மோதின. கடந்த 2 போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்திருந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப டாஸ் வென்ற தமிழ் தலைவாஸ் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 19-8 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது தமிழ் தலைவாஸ் அணி. முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 40-27 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

இதுவரை பங்கேற்ற 16 போட்டியில் 6ல் மட்டும் வென்ற (9 தோல்வி, 1 ‘டை’) தமிழ் தலைவாஸ் அணி 39 புள்ளியுடன் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. ஹரியானா (62), மும்பை (54), பாட்னா (52) ‘டாப்-3’ ஆக உள்ளன. குஜராத் (29) 11வது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 6 போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் சூழலில், அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது.

Readmore: மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்…

Kokila

Next Post

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு...! தமிழக அரசுக்கு ரூ.944.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்..!

Sat Dec 7 , 2024
Cyclone Fenchal impact...! Central government approves release of Rs.944.80 crore to Tamil Nadu government

You May Like