fbpx

மீண்டும் சம்பவம் இருக்கு..!! தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான எச்சரிக்கை..!! மக்களே பாதுகாப்பா இருங்க..!!

தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (டிசம்பர் 10) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளைய தினம் (டிசம்பர் 11) கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More : மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!! 8, 10, +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

The Meteorological Department has said that rain is likely to occur in Tamil Nadu until the 15th.

Chella

Next Post

வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; எவ்வளவு காலத்திற்கு இலவச வசதிகளை வழங்குவீர்கள்?. உச்சநீதிமன்றம் கேள்வி!

Tue Dec 10 , 2024
Supreme court: இன்னும் எத்தனை காலத்திற்கு இலவச வசதிகளை வழங்குவீர்கள் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொடுங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய் பரவலின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த […]

You May Like