fbpx

அட இது தெரியாம போச்சே.. இரயிலில் Unreserved டிக்கெட்டை ஈஸியா கேன்சல் பண்ணலாம்..!! எப்படினு பாருங்க..

நாளுக்கு நாள் ரயில்வேயின் தேவை பொதுமக்களுக்கு அதிகரித்தவாறே உள்ளது. அதனாலையே புது புது வசதிகளை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் unreserved ரயில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தொலை தூரங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்வது போல, முன்பதிவில்லா டிக்கெட்டுகளை யூடிஎஸ் என்ற செயலி மூலம் பயணிகள் எடுத்துக்கொள்ள முடியும். இந்த UTS  ஆப்பில் Unreserved டிக்கெட் எடுப்பது மட்டுமின்றி, நாம் பயணம் செய்ய முடியாதபட்சத்தில் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்யவும் முடியும்.

யுடிஎஸ் செயலியில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை இரண்டு வகையில் எடுக்கலாம்.. பேப்பர்லெஸ் டிக்கெட் மற்றும் பேப்பர் டிக்கெட் என்ற இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. பேப்பர்லெஸ் டிக்கெட் என்றால், டிக்கெட்டை எடுத்த பிறகு தனியாக பிரிண்ட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல பேப்பர் டிக்கெட் என்றால் யுடிஎஸ் செயலியில் டிக்கெட் எடுத்தாலும் கூட ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு உள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்திலோ அல்லது கவுண்டரிலோ காட்டி டிக்கெட் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் பேப்பர்லெஸ் டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது.

Unreserved டிக்கெட் கேன்சல் செய்வது எப்படி ?

* முதல் Log in சென்று உங்களின் செல்போன் எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை குறிப்பிட்டு UTS ஆப்பை ஒப்பன் செய்ய வேண்டும்

* பின்பு cancel என்ற ஆப்சனை கிளிக் செய்தால் நீங்கள் புக் செய்த டிக்கெட் அதில் காட்டும்.

* பின்னர் நீங்கள் அதில் cancel ticket (டிக்கெட் ரத்து செய்) என்ற ஆப்சனை கிளிக் செய்ய்யும்போது, உங்கள் கோரிக்கை தகுதியானதா? என சரிபார்க்கப்படும்.

* இதனைத் தொடர்ந்து டிக்கெட் கேன்சல் தொகையை கழித்தபிறகு ரீபண்ட் தொகை குறித்த விவரங்கள் ஒரு சிறிய பாப்-அப் பாக்ஸ்தோன்றும். பின்பு UTS ஆப் மூலம் நீங்கள் செய்த முன்பதிவை ரத்து செய்ய ‘சரி’ என்பதை அழுத்தவும்.

* பின்னர் புதிய பாப்-அப் பாக்சில் கேன்சல் கட்டணத்தைக் கழித்தது போக மீதி பணத்தை திரும்பப் பெறுவீர்கள்.

* கேன்சல் கட்டணத்தைக் கழித்தது போக மீதி பணம் நீங்கள் கொடுக்கும் ஆப்சனை பொறுத்து R-wallet அல்லது உங்கள் வங்கி கணக்குக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு கிரெடிட் செய்யப்படும்.

* ஒவ்வொரு  Unreserved டிக்கெட்டும் கேன்சல் செய்யும்போது ரூ.30 பிடித்தம் செய்யப்படும். 

* நீங்கள் 30 ரூபாய்க்கு அதிகமாக எடுத்த Unreserved டிக்கெட்டை மட்டுமே கேன்சல் செய்ய முடியும். 30 ரூபாய்க்கு குறைவான Unreserved டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது.

Read more ; டிசம்பர் முடிவதற்குள் இந்த 2 முக்கிய வேலையை முடிச்சிருங்க..!! இல்லையென்றால் சிக்கல் உங்களுக்குத்தான்..!!

English Summary

In this post you can see how to cancel unreserved train tickets.

Next Post

கோவை முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...!

Tue Dec 10 , 2024
Former DMK MP from Coimbatore passes away... Chief Minister Stalin condoles...

You May Like