fbpx

முருகனுக்கு தீபம் ஏற்றி விரதம் இருங்கள்..!! நீங்கள் வைக்கும் வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும்..!!

முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்த உடனே வழிபாடு செய்ய முடியாது. முருகனுக்காக விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்த உடனேயே விரதம் இருக்கவும் முடியாது. முருகப் பெருமானின் அருள் இருந்தால் மட்டுமே வழிபாடு செய்ய முடியும். முருகப்பெருமானின் ஆலயத்திற்கு செல்ல முடியும். அப்படி நாம் விரதம் இருந்தும் வழிபாடு செய்தும் ஆலயத்திற்கு சென்றும் நம்முடைய வேண்டுதல் நிறைவேறவில்லை என்னும் பட்சத்தில் இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதுமானது. முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக கார்த்திகை நட்சத்திரம் திகழ்கிறது. பலரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபடுவார்கள்.

அதேபோல, முருகப்பெருமானுக்கு உகந்த திதியாக சஷ்டி திதி திகழ்கிறது. இந்த சஷ்டி திதியிலும் விரதம் இருந்து வழிபடுவார்கள். இதைவிட அதிக அளவில் பலரும் விரதம் இருக்கக்கூடிய ஒன்றுதான் செவ்வாய்க்கிழமை விரதம். முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது முருகன் அருளால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்யும்போது தீபத்தை ஏற்ற வேண்டும். செவ்வாய்க்கிழமை மட்டும் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

குறிப்பாக, காலை 6 – 7 மணிக்குள் ஏற்றிவிட வேண்டும். மேலும், துவரம் பருப்பை ஒரு தட்டில் பரப்பி அதன் மேல் இரண்டு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி சிவப்பு நிறத்திரி போட்டு வடக்கு பார்த்தவாறு இந்த தீபத்தை வைத்து ஏற்ற வேண்டும். பிறகு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை முருகனிடம் கூறி வழிபாடு செய்துவிட்டு விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். இந்த முறையில் நீங்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விரதம் இருந்து வழிபட்டால், உங்களுடைய வேண்டுதல் முழுமையாக நிறைவேற முருகப்பெருமான் அருள் புரிவார்.

Read More : செல்வ மகள் சேமிப்புத் திட்டம்..!! புத்தாண்டுக்கு வந்தது ஜாக்பாட் அறிவிப்பு..!! மத்திய அரசு சொன்ன செம குட் நியூஸ்..!!

English Summary

In this post, we will see which lamp should be lit to worship Lord Muruga.

Chella

Next Post

கெட்ட கொழுப்பை அசால்ட்டா குறைச்சிடும்..!! வாரம் 2 முறை சாப்பிட்டாலே போதும்..!! பிரண்டையின் பலன்களை தெரிஞ்சிக்கோங்க..!!

Thu Jan 2 , 2025
It improves the digestive system. It helps in repairing blockages in the blood vessels of the heart and regulates blood flow.

You May Like