fbpx

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைக்கடைக்கு படையெடுக்கும் மக்கள்..!!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. சென்னையில் கடந்த சில தினங்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கமாக காணப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், சென்னையில் இன்று (டிசம்பர் 14) ஆபரணத் தங்கத்தின் விலை 720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.57,120-க்கும், கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.7,140க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று (டிசம்பர் 14) கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!! என்ன ஆச்சு..? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

English Summary

In Chennai today (December 14), the price of gold jewelry fell by Rs. 720 to Rs. 57,120 per sovereign and Rs. 90 per gram to Rs. 7,140.

Chella

Next Post

BIG BREAKING | காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

Sat Dec 14 , 2024
Senior Congress leader and Erode East MLA EVKS Elangovan passed away a short while ago.

You May Like