இந்திய உணவுகளில் பிரதானமான பருப்பு வகைகள் ஊட்டச்சத்து மதிப்புக்கு, குறிப்பாக அவற்றின் வளமான புரதத்திற்குப் புகழ் பெற்றவை. இருப்பினும், முறையற்ற சமையல் முறைகள் இந்த அத்தியாவசிய புரதங்களின் தன்மையை கணிசமாகக் குறைக்கும்.
பருப்பு போட்டு செய்யும் சமையல் நம்மூரில் அதிகம். அதனை குக்கரில் போட்டுவிட்டால் எளிதில் வெந்து விடும். குக்கர் இல்லாமல் பாத்திரத்தில் வேக வைக்கும் போது அதிக நேரம் எடுக்கும். அதுவும் ரேஷன் கடையில் வாங்கிய பருப்பு வேக அதிக டைம் எடுக்கும்.. அதனை சமாளிக்க பருப்பு வேக வைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டால், சீக்கிரம் வெந்து விடும்.
குக்கரில் சமைக்கலாமா..? சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பருப்பு நுரையில் பியூரின் அளவு 20 மடங்கு அதிகமாக உள்ளது. இது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. அந்த நுரையை நீக்கிவிட்டு பருப்பை சமைப்பதால் யூரிக் அமில அளவு 20 சதவீதம் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் முதன்முறையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, பருப்பை நுரை நீக்கி சமைக்க வேண்டும் என்பதும் பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதற்கெல்லாம் பிரஷர் குக்கர்தான் வில்லன்.. இந்தியாவில் பருப்பை மண் சட்டியில்தான் வேக வைப்பார்கள். அப்போது பொங்கி வரும் நுரையை கரண்டியால் நீக்கிவிடுவார்கள். ஆனால், இப்போது நேரத்தை மிச்சப்படுத்த பெரும்பாலும் பிரஷர் குக்கரில் பருப்புகளை வேக வைக்கும் முறை வந்துவிட்டது. பிரஷர் குக்கரில் பருப்பை வேக வைக்கும்போது நுரையை அகற்றுவது கடினம். எனவே, பலர் நுரையை அகற்றுவதில்லை.
இந்த ஆய்வு முடிவுகளின் படி பருப்பு நுரையை நீக்கி சமைப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது. இவ்வாறு சமைப்பதால் உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதை தடுக்கிறது மற்றும் மாரடைப்பு, சிறுநீரக நோய் மற்றும் மூட்டு பிரச்சனைகள் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
Read more ; என்ன ஆச்சு..? தங்கம் விலையில் இப்படி ஒரு நிகழ்வா..? ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?