ஏடிஎம் பணம் வழங்குவது தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் மாற்றியுள்ளது. வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் ஏடிஎம்களில் பணம் எடுப்பது தொடர்பான விதிகள் திருத்தப்பட்டன. தற்போது, மீண்டும் விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புது ரூல்ஸ்
ஏடிஎம் மையங்களில் மக்கள் பணம் எடுக்கும் போது, பணம் வெளியில் வராமல், பணத்தை எடுக்க சிக்கல் விளைவிக்கும் மோசடியை கையாளும் விதமா இந்த புதிய ஏடிஎம் ரூல்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எடுக்கவில்லை என்றால், இனி பணம் தானாகவே மீண்டும் ஏடிஎம் இயந்திற்குள் சென்றுவிடும் படி இயந்திரங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியின் படி, ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கும் ஏடிஎம் கார்டு பயனர்கள் 30 வினாடிகளுக்குள் பணத்தை எடுக்கத் தவறினால், பணம் தானாகவே ஏடிஎம் மூலம் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும். இதன் பின்னர், மீண்டும் எடுக்கப்பட்ட தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி 30 வினாடிக்குள் ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாடு வந்துள்ளது.
சமீப நாட்களில், ஏடிஎம் இயந்திரங்களில் சில மோசடி நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன. இதனால் பணம் எடுப்பதற்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதியின்படி, ஒரு வாடிக்கையாளர் தனது பணத்தை இயந்திரத்திலிருந்து எடுக்க மறந்துவிட்டால், அந்த பணம் இயந்திரம் மூலம் திரும்பப் பெறப்பட்டு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பணம் எடுப்பது பாதுகாப்பானதாக மாறும் என்றும், மோசடி சம்பவங்கள் கணிசமாகக் குறைக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.