fbpx

பரபரப்பு.. யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது..!!

தேனி கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது, அவரது கார் மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்டோரிடம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குறிப்பாக அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 6 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின் போது சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக ஆஜராகாதது குறித்து அவரது வழக்கறிஞர் மனு அளித்தார். அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி செங்கமலச்செல்வன், சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் சவுக்கு சங்கர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

Read more ; கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடையில்லை..! தமிழக அரசு மனு தள்ளுபடி..! உச்ச நீதிமன்றம் அதிரடி..!

English Summary

YouTuber Savukku Shankar Arrested Again.

Next Post

Year Ender 2024 | உலக அளவில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் இதோ..!!

Tue Dec 17 , 2024
Deepfakes, India-Canada stand-off: Top 12 issues that made headlines in 2024

You May Like