fbpx

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி.. பாதிக்கப்படும் மிடில் கிளாஸ்..!! எந்தெந்த பொருட்களின் விலை உயரும்..?

இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் விளைவாக இந்திய பொருளாதாரம் மற்றும் நாட்டு மக்களும் கடுமையாக பாதிக்கப்படலாம். குறிப்பாக இந்தியாவின் மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத விதமாக 85.06 என்ற அளவை தொட்டது. இந்த மோசமான வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது 2 நாள் நாணய கொள்கை முடிவில் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரையில் குறைத்தது தான் எனக் கூறப்படுகிறது.

பாதிக்கபடும் மிடில் கிளாஸ் மக்கள் : ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு பலவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ரூபாய் மதிப்பு குறையும் போது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயர்ந்து, பணவீக்க உயர்வுக்கு வழிவகுக்கிறது. இது இந்திய நுகர்வோர்களின் வாங்கும் சக்தி அதாவது purchasing power கடுமையாக பாதிக்கிறது. இதேவேளையில் பணவீக்கத்திற்கு இணையாக மக்களின் வருமானம் உயராத காரணக்தால் நடுத்தர வர்க்கம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட இந்த மக்கள் இந்த ரூபாய் மதிப்பின் சரிவு மூலம் ஏற்படும் விலைவாசி உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளி நாடுகளில் கல்வி : இந்த ஆண்டு வெளிநாடுகளில் கல்வி பயில இருப்பவர்கள் மற்றும் கடந்த ஆண்டு கல்விக் கடன் பெற்று பாதிப் படிப்பை முடித்திருப்பவர்களுக்கு சிக்கல்கள் அதிகமாக இருக்கும். ஏனெனில் இந்திய ரூபாயில் அளிக்கப்பட்டுள்ள கல்விக் கடன் அப்போதைய டாலர் மதிப்புக்கு நிகராக அளிக்கப்பட்டு இருக்கும். 

சுற்றுலா : வெளிநாட்டு சுற்றுலா செல்வதற்கான தொகை உயரும். எரிபொருள் விலை உயர்வதால், விமான கட்டணம் மற்றும் தங்குமிடங்களுக்கான செலவு அதிகரிக்கும். சரிவடைந்த ரூபாய் மூலம் குறைந்த அந்நியப் பணமே கிடைக்கும் என்பதால் உங்களது தனிப்பட்ட செலவுகளை நீங்கள் குறைக்கவேண்டியது இருக்கும்.

கார் மற்றும் செல்போன் : ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்தால் மொபைல் ஃபோன்கள், டிஜிட்டல் கேமராக்கள், மடிக் கணினிகள் போன்றவற்றின் விலை உயரும். இதேநிலை வாகன உபகரணங்களை இறக்குமதி செய்யும் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஏற்படும். மாருதி, டெயோடா, ஹூண்டாய் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் கார் விலை உயரும்.

Read more ; தமிழ்நாடு என்ன குப்பைத் தொட்டியா..? இதையெல்லாம் தடுக்க மாட்டீங்களா முதல்வரே..!! – எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

English Summary

Depreciation of the Indian rupee against the dollar.. middle class will suffer..!! Which goods will increase in price?

Next Post

'ஒரே நாடு ஒரே தேர்தல்'கொண்டு வந்தது காங்கிரஸ்.. ஆதரித்தது கலைஞர்..!! இப்போ ஏன் மாத்தி பேசுறாங்க..! - சீமான் பளீச்

Thu Dec 19 , 2024
Naam Tamilar Party coordinator Seeman alleged that the Congress was the first to bring one country, one election.

You May Like